குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் விடுதிகளை மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் ஏராளமான தனியார் விடுதிகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது.
மேலும், இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: அண்ணாமலைப் பல்கலை தனி அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாரயண பிரசாத் அமர்வு, செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியார் விடுதிகளை மூட உத்தரவிட்டனர். மேலும், செயற்கை நீர்வீழ்ச்சி தொடர்பான அறிக்கைகளை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.