முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி!

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
வானிலை ஆய்வு மையம்
பகிர்:

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், ஒரு வாரமாக வடதமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →