முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 44 நாள்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது!

கடந்த 44 நாள்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 44 நாள்களுக்கு பிறகு சரியத் தொடங்கியது.

கடந்த 44 நாள்களாக மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 120 அடியாக நீடித்து வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

வியாழக்கிழமை மாலை பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் வியாழக்கிழமை மாலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,774 கன அடியாக சரிந்தது. 

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் 44 நாள்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.89 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 93.29 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →