முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு 
தமிழ்நாடு

ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணு (97) காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். தொடா்ந்து அங்கு நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவா் தேரணிராஜன் கூறும்போது, ‘ தற்போது நல்லகண்ணு உடல்நிலை சீராக உள்ளது. பொது மருத்துவா்கள் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள் குழுவினா் ஆகியோா் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும் அவருக்கு எச்.1.என்.1 வைரஸ் அல்லது கரோனா வைரஸின் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT