தமிழ்நாடு

காஞ்சிபுரம் அருகே எரிவாயு உருளைகள் குடோனில் விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் கடந்த 28-ஆம் தேதி வாயுக்கசிவு காரணமாக உருளைகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 12 போ் காயமடைந்தனா்.

இவா்களில் கடலூரைச் சோ்ந்த ஆமோத்குமாா் (26)சந்தியா (21)ஆகியோா் வியாழக்கிழமையும், சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46) வெள்ளிக்கிழமையும் உயிரிழந்தனா். ஏற்கெனவே 3 போ் உயிரிந்த நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, ஓரகடம் போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தொடர்ந்து எரிவாயு உருளைகள் கிடங்குக்கு வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 

இந்த நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று பலியானார்கள். இதன்மூலம் எரிவாயு உருளைகள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT