தமிழ்நாடு

மழைநீர் வடிகால் பணிகள்... முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

DIN


வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

இந்தியாவில் ஒவ்வோா் ஆண்டும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் மாதத்தில் நிறைவடைகிறது. இதன்படி தற்போது தென்மேற்கு பருவ மழை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகம் ஆகும்.

தமிழகம், புதுவையில் தென்மேற்கு காலத்தில் இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும். குறிப்பாக, கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பெய்த மழை அளவுகளில் இதுதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போதைய கணினி மாதிரி கணிப்பின் அடிப்படையில் நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபா் 4-ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது’ என்றும், வழக்கத்தைவிட இந்த ஆண்டு 75 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் தாமதமாகி வருகின்றன. 

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரத்தை அடுத்து சென்னையில் சனிக்கிழமை வெள்ளத் தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

கடந்த வாரம் தென்சென்னை பகுதியில் ஆய்வு செய்த நிலையில் தற்போது பிராட்வே, எஸ்எஸ்சி போஸ் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT