தமிழ்நாடு

பிறந்து சில மணி நேரத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தை!

சேலம் நெத்திமேடு அருகே பிறந்து சில மணி நேரத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

DIN

சேலம் மாநகர் நெத்திமேடு அருகே உள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.

இன்று காலை வழக்கம் போல குப்பை அள்ள வந்த மாநகராட்சி பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிறந்து சில மணி நேரங்களை ஆன பச்சிளம் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் ஆணா, பெண்ணா என்பது அடையாளம் தெரியாமல் உள்ளது. மேலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT