தமிழ்நாடு

முலாயம் சிங் மறைவு: இந்தியாவின் சமூகநீதித் தூண் சாய்ந்தது - அன்புமணி ராமதாஸ் இரங்கல்

சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  முலாயம் சிங் யாதவ்  மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு என பாமத தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்

DIN


சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  முலாயம் சிங் யாதவ்  மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு என பாமத தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. 

இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்.

சமூக நீதியின் தூணாக திகழ்ந்த  அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

இந்தோனேசியா: இந்தியர் உள்பட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம்!

மூளையைத் தின்னும் அமீபா: மனித மூளைக்குள் எப்படி நுழைகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

ஹிப் ஹாட்... அமைரா தஸ்தூர்!

உள்கட்சிப் பூசல்? தமிழக பாஜக தலைவர்கள் நாளை தில்லி பயணம்!

SCROLL FOR NEXT