தமிழ்நாடு

சாயம் போகாத கட்சி தி.மு.க.: அமைச்சர் கே.என். நேரு        

திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டு காலத்தில் திருச்சிக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

DIN

திருச்சி: திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டு காலத்தில் திருச்சிக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

திருச்சி,  பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம்  போன்ற கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று  தொடங்கி வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: 

தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்தில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமே சுமார் ரூ.5000 கோடிக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், மழை பெய்தால் தி.மு.க வின் சாயம் வெளுத்து போகும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிகிறார். 

ஒரு போதும் தி.மு.க.வின் சாயம் வெளுக்காது. சாயம் போகாத கட்சி தி.மு.க. ; அ.தி.மு.க வின் சாயம் தான் வெளுத்து போகும் என்றார்.              

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர்  மா.பிரதீப் குமார், மாநகரக் காவல் ஆணையர் க.கார்த்திகேயன்,  மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்,  மாநகராட்சி ஆணையர் ரா. வைத்திநாதன்,  நகரப் பொறியாளர் சிவபாதம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ. ஸ்டாலின்குமார்,  ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, ப. அப்துல்சமது மற்றும் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

SCROLL FOR NEXT