தமிழ்நாடு

தஞ்சையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசுப் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

DIN

சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த அரசுப் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த கோவிலாச்சேரி பகுதியில்  சென்னையிலிருந்து தஞ்சை நோக்கி வந்த  அரசு பேருந்து  பேருந்து ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து  சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

இதில், பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 17 பேர் லேசான காயமும் பேருந்து ஓட்டுனர் கர்ணாமூர்த்தி, நடத்துனர் கார்த்திகேயன், பயணிகள் ரமேஷ், கீர்த்திகா விஜயலட்சுமி, சந்திரசேகர், தமிழ்செல்வி ஆகியோ 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் ஏற்பட்ட 7 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழபுரம் காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்

வலுவான ‘ஜிடிபி’ தரவுகளால் பங்குச் சந்தையில் எழுச்சி!

டிசம்பரில் கூட்டணி முடிவு: டிடிவி தினகரன்

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 30% அதிகரிப்பு

SCROLL FOR NEXT