தமிழ்நாடு

தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி?

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். 

DIN

வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

எசனை, சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

சுராங்கனி... ஷிவானி நாராயணன்!

குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

SCROLL FOR NEXT