உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் இறுதிச் சடங்கில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.
உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
இதையும் படிக்க | முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்!
உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங்கின் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க | முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை..!
இந்நிலையில், திமுக சார்பில் கட்சியின் பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி செயலாரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.