தமிழ்நாடு

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் பலி!

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

DIN

துறையூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

துறையூர் அருகேயுள்ள ஒட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் நாகராஜ்(23). கேட்டரிங் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஏரி நீர் அளவையும், ஏரிக்கு  நீர் வரும் அளவையும் பார்க்க சனிக்கிழமை சென்றார். அந்த சமயத்தில் அங்கு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. 

இதில் நாகராஜ் மின்னல் பாய்ந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT