முகப்பு
தமிழ்நாடு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - சேலம் ஆட்சியர் அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 

கர்நாடகப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்து தற்போது 85 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் உபரிநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார் 

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று கூறியுள்ள அவர், ஆற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →