கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணை 
தமிழ்நாடு

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில், 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உள்ள நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாற்று அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வரத்து ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 68.50 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). 

அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,094 கன அடியாகவும், அணையில் தண்ணீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் திட்டங்களுக்கும், பாசனக் கால்வாய்களிலும் வினாடிக்கு 699 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பொதுப்பணித் துறை பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT