மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: இன்றைய அணை நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைய தொடங்கியுள்ளது.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைய தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கனமாழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,95,000 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.
தற்பொழுது நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருகிறது. மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக குறைந்தது. நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,53,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.