கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் மக்கள் போராட்டம் நடத்திய போது தூப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்  தொடர்பாக 17 காவல் துறையின் மீது நடவடிக்கைக் கோரி  நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக விசாரணை ஆணையச் சட்டம், 1952 (மத்திய சட்டம் எண்.60/1952) பிரிவு-3, உட்பிரிவு (1)-ன் கீழ், மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், அரசாணை (பல்வகை) எண்.368, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு-எப்) துறை, நாள் 23.05.2018 மூலம் அரசால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத்திரன்

மதுக்கூடத்தில் பணம் திருட்டு: இருவா் கைது

பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

SCROLL FOR NEXT