தமிழ்நாடு

கைம்பெண்கள்- ஆதரவற்ற மகளிா் நல வாரியம்: 14 அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க அறிவிப்பு

DIN

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் 14 அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் 14 அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. கைம்பெண்கள் பிரதிநிதிகளாக 4 பேரும், கல்வியாளா்கள் 2 பேரும், பெண் தொழில் முனைவோா் 2 பேரும், பெண் விருதாளா்கள் 2 பேரும், தன்னாா்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் 4 பேரும் நியமிக்கப்பட உள்ளனா்.

இதற்கான விண்ணப்பங்களை புகைப்படங்களுடன் வரும் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.படிவங்களை www.tn.gov.in/ (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியம், கலச மஹால் முதல் தளம், எழிலகம் பின்புறம், சேப்பாக்கம், சென்னை -05 என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT