தமிழ்நாடு

அண்ணா பல்கலை.யில் முறைகேடு: ரூ. 35.90 கோடி நஷ்டம்!

அண்ணா பல்கலைக்கழகம் தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை வாங்கியதுயது, சான்றிதழ்களை எண்ம(டிஜிட்டல்)மயமாக்கியது என ரூ. 35.90 கோடி முறைகேடு செய்துள்ளது. 

DIN

அண்ணா பல்கலைக்கழகம் தேவைக்கு அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை வாங்கியதுயது, சான்றிதழ்களை எண்ம(டிஜிட்டல்)மயமாக்கியது என ரூ. 35.90 கோடி முறைகேடு செய்துள்ளதாக கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 

அந்த காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகமாக வெற்றுச் சான்றிதழ்களை வாங்கியதுயது, சான்றிதழ்களை எண்மமயமாக்கியது என ரூ. 35.90 கோடி முறைகேடு செய்துள்ளதாக நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கான சான்றிதழ்களை எண்மமயம் ஆக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை அளித்ததன் மூலம் 11 கோடியே 41 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் எண்மமயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின்  சான்றிதழ்களின் எண்ணிக்கை 7,33,720 என்ற நிலையில் 20,92,035 சான்றிதழ்கள் எண்மமயம் ஆக்கப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், உள்ளிட்ட சான்றிதழ்களை அச்சிடுவதற்காக வாங்கப்பட்ட வெற்றுச் சான்றிதழ்களிலும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 17,15,441 சான்றிதழ்கள் தேவைப்பட்ட நிலையில் 1,63,30,000 வெற்று சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. 

தற்போது சான்றிதழ்களின் வடிவத்தை மாற்றியதால் 24.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெற்றுச் சான்றிதழ்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு காரணமாக மொத்தமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ. 35.90 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறையில் கலைவிழா நாளை தொடக்கம்

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் குழுவினா் சந்திப்பு

ஜன.16, 26-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

2019-ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைதானவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு

குளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT