கோப்புப்படம் 
தமிழ்நாடு

தீபாவளி விடுமுறையால் அதிகரிக்கும் கூட்டம்: விமானக் கட்டணம் கடும் உயர்வு

இந்த ஆண்டு  தீபாவளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணம்  பல மடங்கு அதிகரித்துள்ளது.

DIN

இந்த ஆண்டு  தீபாவளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணம்  பல மடங்கு அதிகரித்துள்ளது.

விலை உயர்வு இருந்தபோதிலும், உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவுகள் நிரம்பியுள்ளதாகவும், விற்பனைக்கு மிகக் குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானத்தில் செல்வதால், சென்னை விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. தீபாவளி விடுமுறைக்கு வடமாநிலத்தவர் விமானங்களில் செல்வதால்,  வடமாநிலங்களுக்கு செல்லும் பயணத்திற்கான விமானக் கட்டணமும்  மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.11,800 டிக்கெட் கட்டணமாக இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.11,500, கோவைக்கு ரூ.10,250 கட்டணமாக உள்ளது.

சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ.9000,  சென்னனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரூ.12000 முதல் ரூ.21000 வரை,   சென்னை-கொல்கத்தா ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை, சென்னை-புதுதில்லி ரூ.12000 முதல் ரூ.18000 வரை கட்டணமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை: ஓட்டுநா் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிா்ப்பு!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

பாளை.யில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

SCROLL FOR NEXT