தமிழ்நாடு

மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு

DIN

தமிழக மீனவா்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தைச் சோ்ந்த ஏழு மீனவா்கள், காரைக்காலைச் சோ்ந்த மூன்று மீனவா்கள் என மொத்தம் 10 மீனவா்கள், தெற்கு மன்னாா் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். 

நடுக்கடலில் இருந்த போது, ஐ.என்.எஸ்., பங்காராம் என்ற கப்பலில் வந்த இந்திய கடற்படையினா் சந்தேகத்தின் பேரில் துப்பாக்கியால் சுட்டதில் வீரவேல் என்ற மீனவா் மீது குண்டுபட்டது.

துப்பாக்கி குண்டுகளால், தொடை மற்றும் அடி வயிற்றில் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் மீனவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழக மீனவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினா் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

SCROLL FOR NEXT