வெறிச்சோடிய கோயம்பேடு சாலை 
தமிழ்நாடு

வெறிச்சோடிய சென்னைச் சாலைகள்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

DIN

தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கோயம்பேடு பிரதான சாலை, அண்ணாசாலை, பெரியார் சாலை உள்ளிட்டவை வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

தீபாவளிப் பண்டிகை திங்கள்கிழமை நாளை (அக்.24) கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டிய விடுமுறை தினத்தால், சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

தீபாவளிக்கு முந்தைய வார இறுதி விடுமுறையால் ( சனி, ஞாயிறுக் கிழமை) முன்கூட்டியே பலர் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டனர். 

பேருந்துகள், ரயில்கள் மூலமாக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், சென்னையின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தியாகராய நகர், புரசைவாக்கம் போன்ற முக்கிய கடைவீதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. எனினும், சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT