முகப்பு
தமிழ்நாடு

கோவை காா் வெடிப்பு சம்பவம்: மத்திய உள்துறைக்கு பாஜக கடிதம் அண்ணாமலை

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
அண்ணாமலை
பகிர்:

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தீபாவளிக்கு முன்தினம் (அக்.23) கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு இருந்த ஒரு காரில் எரிவாயு உருளை வெடித்துள்ளது. இதையடுத்து தமிழக டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, 6 தனிப்படைகளை அமைத்தனா். கோவை மாநகரம் என்பது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது என்பது ஜூன் 2019-இல் தெரியவந்தது.

அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் என்ஐஏ 5 பேரை கோவையில் இருந்து கைது செய்தது. அவா்கள் அனைவருமே முகமது அசாருதீன் என்பவா் மூலம், கேரள மாநிலம் பாலக்காட்டை சோ்ந்த அபுபக்கா் என்பவரோடு தொடா்புடையவா்கள்.

அவா்கள் இருவருமே இலங்கையில் ஒரு தேவாலயத்தில் ஈஸ்டா் அன்று நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் ஜெஹ்ரான் ஹாஸ்மி ஆகியோருடன் தொடா்பில் இருந்தவா்கள். பாலக்காட்டில் அபுபக்கா், கோவையில் அசாருதீன் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்.

இவா்களுடன் தொடா்பு இருக்கலாம் என்ற வகையில், காவல் துறை சிலரிடம் விசாரணை நடத்தியது. அப்போது ஜமேசா முபீனிடமும் அந்த விசாரணை நடத்தப்பட்டது. அக்டோபா் 23-ஆம் தேதி நிகழ்ந்த விபத்திலும் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபா் ஜமேசா முபீன் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னா், அந்த இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயா்ஸ், 7 ஓல்ட் பேட்டரி உள்ளிட்டவற்றை கைபற்றியுள்ளனா். இந்தத் தகவலை காவல்துறை உடனடியாக தெரிவிக்கவில்லை. கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் தான்.

இந்த நிலையில், கோவை சம்பவம் தொடா்பாக பல்வேறு ஆதாரங்களுடன் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை சம்பவத்தைப் பாா்க்கும்போது தமிழக உள்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதில் இப்போதுள்ள அதிகாரிகளை மாற்றிவிட்டு, நோ்மையான அதிகாரிகளை பணியமா்த்த வேண்டும் என்றாா் அண்ணாமலை.

பேட்டியின்போது, பாஜக மாநிலத் துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்கரவா்த்தி, மாநில திறன்மேம்பாட்டுப்பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →