தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா

DIN

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால்  முகூர்த்தம் நடப்பட்டது.  

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோயிலில் பந்தக்கால்  முகூர்த்தம் நடப்பட்டது.  முன்னதாக பந்தக்காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட  பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, சதய விழாவை முன்னிட்டு வரும் நவ.2 ஆம் தேதி பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.

நவ.3 ஆம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு கோயில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT