தமிழ்நாடு

தமிழகத்தில் தோன்றியது பகுதி சூரிய கிரகணம்!

தலைநகரான சென்னையில் பகுதி நேர சூரிய கிரகணம் தென்பட்டது. தமிழகத்தில் மாலை 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே சூரிய கிரகணம் தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னையில் பகுதி நேர சூரிய கிரகணம் தென்பட்டது. தமிழகத்தில் மாலை 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே சூரிய கிரகணம் தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். 

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான இன்று (அக்.25) பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சூரியன் மறையும் நேரத்தில் தமிழகத்தில்  அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும். 

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி சூரிய கிரகணத்தை சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் கண்ணாடி அணிந்தும், வெண் திரையில் பிம்பத்தை விழச்செய்தும் பார்த்தனர். 

சூரிய கிரகணத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. எனினும் சனீஸ்வரன் பகவான் கோயில் நடை மட்டும் திறக்கப்பட்டிருந்தது. சூரிய கிரகணத்தின்போது சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதேபோன்று திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் பிரதமர் மோடி!

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள்: வரலாறு படைத்த இங்கிலாந்து!

SCROLL FOR NEXT