தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு வழக்கு: அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் ஆறாவதாக கைதான அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

DIN

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் ஆறாவதாக கைதான அப்சர்கானை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை ஐந்து பேரையும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஜெ.எம்.5 நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தினார்கள். 

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சல்கானை நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். 

அதையடுத்து போலீசார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-க்கு முழுமையாக மாற்றப்படுகிறது. மேலும், தமிழக போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேலையில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டுவருவதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்தியா.. மூன்றாவது முறை வரலாறு படைக்குமா?

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா?

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பாஜக, அதிமுகவை கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்!

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அபார பந்துவீச்சு.. 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நெதர்லாந்து!

SCROLL FOR NEXT