குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி 
தமிழ்நாடு

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர்.

இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

எனவே, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ  தேர்வு முடிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை நாடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT