தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு: விசாரணையில் புதிய தகவல்!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களில் ஒருவரான ஃபிரோஸ், இலங்கை தேவாலய குண்டுவெடிப்பில் தொடர்புடைய ரஷீத் அலி, முகமது அசாருதீனை கேரள சிறையில் சந்தித்ததாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி முகமது அசாருதீன், ரஷீத் அலி ஆகியோர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டு தற்போது கேரளத்தின் வியூர் சிறையில் உள்ளனர். 

கடந்த 2019ல் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது பல்வேறு தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காா் வெடித்து விபத்து ஏற்பட்டதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஜமேஷா முபீனின் நெருங்கிய உறவினரான அஃப்சா் கான் (28) என்பவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை! உச்ச நீதிமன்றம்

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் க்யூஆர் குறியீடு மோசடி!

கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

SCROLL FOR NEXT