கோப்புப் படம் 
தமிழ்நாடு

காவல் துறைக்கு தகுந்த பதில் தரப்படும்: அண்ணாமலை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு விசாரணையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திசை திருப்புவதாக தமிழ்நாடு காவல் துறை அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கு அண்ணாமலை ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

DIN

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு விசாரணையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திசை திருப்புவதாக தமிழ்நாடு காவல் துறை அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கு அண்ணாமலை ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:  தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்.  காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல் துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும்.  பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT