தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

DIN

தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்லவிருந்த நிலையில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 -ஆவது ஜெயந்தி விழா, 60 -ஆவது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 30) நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று(சனிக்கிழமை) இரவு மதுரை செல்லவிருந்தார். 

இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு நேற்றிரவே வீடு திரும்பினார். 

முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரது பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி ஆகியோர் தேவர் குருபூஜையில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT