தமிழ்நாடு

வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி: தடுக்கச் சென்ற காவலாளி தாக்குதல்!

DIN

வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அதை தடுக்கச் சென்ற காவலாளி மீது கொள்ளையர்கள் சரமாரிமாக தாக்கியுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த கரும்பாக்கத்தில்  உள்ள இந்தியன் வங்கியில் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றார் இவர் இதே கரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். 

நள்ளிரவில் சரியாக 12-30 மணிக்கு வந்த மர்ம நபர்கள் வங்கியில் பின் பக்க சுவரை கடப்பாரையால் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது சுவர் உடைக்கும் சத்தம் கேட்டதும் வங்கி பின் பக்கம் சென்று பார்க்கும் போது சுவரை பல கொள்ளையர்கள் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தடுக்க சென்ற காவலாளியை சரமாரிமாக தாக்கியுள்ளனர். 

இருசங்க்கர வாகனத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த காவலாளி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த பகுதியில் சாலவாக்கம் காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடவியல் நிபுனர்களின் உதவியுடனும் வங்கியில் மர்ம நபர்களின் தடயகளை சேகரித்து வருகின்றனர்

வங்கியில்  வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் கைபற்றி காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

கரும்பாக்கம் பகுதியில்  காவலாளியை தாக்கி  பணம் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் அதிஷ்டவசமாக தப்பியது.

கரும்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரம் அனைத்தும் கிராமப் பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் இருக்காது என நினைத்து வங்கியில் கொள்ளையடிக்க மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

மேலும் வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் யார், எத்தனை பேர் வந்துள்ளனர் என மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணை செய்ய காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT