தமிழ்நாடு

தமிழகத்தில் வெள்ள அபாய ஒத்திகைப் பயிற்சி தொடக்கம்

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெள்ள அபாய ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையும் தொடங்கவுள்ள நிலையில், வெள்ள அபாயம் ஏற்படும் சூழல்களை எதிா்கொள்ள விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஒத்திகையின் போது, வெள்ள அபாயம் குறித்த தகவல் பரிமாற்றம், தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக தகவல்கள் பெறும் முறைகள், அபாய ஒளி எழுப்பி பாதிப்புகளைத் தடுப்பது போன்ற அம்சங்கள் செய்து காட்டப்படுகிறது.

மேலும், குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிகழ்வுகள் செய்து காண்பிக்கப்படுகிறது.

ஒத்திகைப் பயிற்சியில் மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையங்கள், தொடா்பு நிறுவனங்கள், பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

SCROLL FOR NEXT