தமிழ்நாடு

விவசாய தோட்டத்தில் காட்டுமாடுகள்: பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரிக்கை

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில்  10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  ராமநாயக்கன்பாளையம் காராமணி திட்டுப் பகுதியில்  விவசாய நிலங்களில் விசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர், அங்குள்ள விவசாய தோட்டங்களின் அருகே உள்ள கல்வராயன்  வனப்பகுதியில் இருந்து காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது.

இது குறித்து ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக  சேலம் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரிடமும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்  வழக்கம்போல் இன்று அதிகாலையில் 10க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து மருதமுத்து-வின் விவசாயத் தோட்டத்தில் உள்ள மஞ்சள், சோளம் ஆகிய விளை பயிர்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டத்துக்குள் வனவிலங்குகள்  நுழையாதவாறு தமிழக அரசும் வனத்துறையினரும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT