நாளை திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கலைவாணா் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.
விழாவில், விருதாளா்களுக்கு தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியன வழங்கப்பட உள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள், நடிகா்கள், நடிகைகள், சின்னத்திரை தொடா்கள் ஆகியவற்றுக்கான விருது அறிவிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த விருதுகள் வழங்குவதற்கான விழா, சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளா்கள் அனைவரும் விழாவுக்கு மாலை 4 மணிக்குள் வர வேண்டுமென அரசின் செய்தியில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.