கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி ஒத்திவைப்பு: டிஆர்பி அறிவிப்பு

வரும் 10 ஆம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்-I-க்கான தேதி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

DIN


வரும் 10 ஆம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்-I-க்கான தேதி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
 
ஆசிரியர் தகுதித் தேர்வு  2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1க்கான தேர்வுகள் மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் நடத்த  உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கடந்த மாதம்  தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I-க்கான தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

பொதுவாக, தேர்வுக்கு 7 நாள்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்த விவரமும், 3  நாள்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் நிலையில், 7 நாள்களுக்கு முன்பாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

லைட் ஹவுஸ்... ஷ்ருதி ஹாசன்!

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

SCROLL FOR NEXT