தமிழ்நாடு

ட்விட்டர் ட்ரெண்ட்: தமிழக அரசியல் தலைவர்களின் 'ஒற்றைச் சொல் ட்வீட்' என்ன?

DIN

ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'ஒற்றைச் சொல் ட்வீட்'டில் முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், சசிகலா உள்பட தமிழக அரசியல் தலைவர்களும் இணைந்துள்ளனர். 

அமெரிக்காவின் 'அம்ட்ராக்' என்ற ரயில் சேவை நிறுவனம் 'trains' என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றைச் சொல்லில் ட்வீட் செய்து வருகின்றன. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'democracy' (ஜனநாயகம்) எனவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' எனவும் பதிவிட்டுள்ளனர். அதுபோல நாசா, 'universe' (பிரபஞ்சம்) என பதிவிட்டுள்ளது. 

இதுபோல தமிழக அரசியல் தலைவர்களும் இந்த ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'திராவிடம்' எனப் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'தமிழ்நாடு' எனவும்,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'தமிழன்' எனவும் 

பாமக நிறுவனர் ராமதாஸ் 'சமூகநீதி' எனவும்

வி.கே. சசிகலா, 'ஒற்றுமை' எனவும் 

துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 'அம்மா' என்றும் 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழ்த் தேசியம்' என்றும் 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் 'மக்கள்' 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ 'மனிதநேயம்' என்றும் பதிவிட்டுள்ளனர்.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் - 'வறுமை ஒழிப்பு'

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - சனநாயகம்

அதிமுக ட்விட்டர் கணக்கில் - 'எடப்படியார்' 

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் - 'வீரப்பெண்மை' 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் - 'சமத்துவம்'

திமுக எம்.பி. கனிமொழி - 'பெரியார்'

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் - 'ஒற்றுமை' என்றும் ட்வீட் செய்துள்ளனர். 

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் என ட்வீட் செய்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுதலை என டிவீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT