தமிழ்நாடு

வ.உ.சி எனும் பெருமகனைப் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்

DIN

வ.உ.சி  பிறந்தநாளையொட்டி அவரை போற்றி வணங்கிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

இந்திய விடுதலை சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேய கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தின் மூலம் சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை மேற்கொண்டார். இதன் காரணமாக ஆங்கிலேய அரசால் தேச துரோகியாக குற்றம் சாட்டப்பட்ட இவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

பாஞ்சாலங்குறிச்சி மண்ணீல் புறந்ததால், தாய்ப்பாலைப் பருகும்போதே தேசியம் எனும் பாலையும் சேர்த்துப் பருகியிருக்க வேண்டும். அதனால் தான் 21 வயதில் தீவிரவாதக் குழுவின் தலைவராகிய பாலகங்காதர திலகரை குருவாக ஏற்றுக்கொண்டார். 

தேசத்தையும் தேசாபிமானிகளையும் காப்பதற்காகவே சட்டவியல் படித்து வழக்குரைஞகான வ.உ.சி, தமிழிலும்,  ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ.சி, எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர் ,சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  தான் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டதுடன்,  மற்றவர்களையும் பங்கு கொள்ள இவர் முக்கிய காரணமாக இருந்தவர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விடுதலைப் போரில் தன் சொத்து சுகங்களை இழந்து, ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின்  பிறந்த நாள் இன்று. சிறையில் செக்கிழுத்து, அவர் புரிந்த தியாகங்களால் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம். அந்த நன்றியோடு, வ.உ.சி எனும் அப்பெருமகனைப் போற்றி வணங்கிடுவோம்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT