முகப்பு
தமிழ்நாடு

சென்னை வந்தார் ராகுல் காந்தி

ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை (செப்.9) சென்னை வந்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

கன்னியாகுமரியில் ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை (செப்.9) சென்னை வந்தார். 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை பயணத்தை நாளை புதன்கிழமை ராகுல் காந்தி தொடக்கி வைத்து அதில் பங்கேற்கிறார்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி நாளை காலை அஞ்சலி செலுத்தவுள்ளார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு நாளை முதல்முறையாக ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி செல்லவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தந்தையின் நினைவிடத்தில் தியானம் செய்யும் ராகுல் காந்தி, பின்னர் சென்னை திரும்பி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ஒற்றுமைப் பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கி ஸ்ரீீநகர் வரையில் நடைபெறவுள்ள இந்த பயணம், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியாக 3,570 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →