கோப்புப் படம். 
தமிழ்நாடு

23 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

DIN

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்: கடந்த 9 மாதங்களாக இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 150 தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து உதவிகளைச் செய்ததற்காக தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகள். இந்த நிலையில், மீனவா்கள் பிடித்துச் செல்லப்பட்ட மற்றொரு விஷயம் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

புதுச்சேரி பதிவெண் கொண்ட இயந்திர படகில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 இந்திய மீனவா்களை இலங்கை கடற்படையினா் பிடித்துச் சென்ற நிகழ்வு குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையால் பிடித்துச் செல்லப்பட்ட 12 மீனவா்களில் 5 போ் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். தமிழ்நாட்டைச் சோ்ந்த 23 மீனவா்களும் அவா்களது 95 படகுகளும் இலங்கை கடற்படை வசமுள்ளன.

எனவே, இந்த விஷயத்தில் தூதரக ரீதியிலான உரிய நடவடிக்கைகளை தாங்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீனவா்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT