நடிகர் விஷாலுக்கு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம்
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
விஷால் ஆஜராகாத நிலையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட அவரின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.
நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
Advertisement
Advertisement
தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஆன நிலையில், 6 மாதங்கள் ஆனாலும் பணத்தை செலுத்த முடியாது என விஷால் தரப்பு வாதம் செய்ததது.
இதையும் படிக்க: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: தக்காளி விலையில் மாற்றம்
இந்நிலையில், நடிகர் விஷாலுக்கு மேலும் 2 வாரம் அவகாசத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.