திருப்பூர்: தாராபுரத்தில் 40 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பூனையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் சனிக்கிழமை மீட்டனர்.
தாராபுரம் பெரிய கடைவீதி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன்(57), பொறிக்கடை வியாபாரியான இவரது வீட்டில் 90 ஆண்டுகள் பழைமையான 40 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
இந்தக் கிணற்றில் வெங்கடேசனின் வளர்ப்புப் பூனை தவறி விழுந்தது. இந்தக் கிணற்றில் 10 அடி தண்ணீரில் பூனை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை வெங்கடேசன் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்தத் தகவலின்பேரில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்
இதன் பின்னர் குறுதிய அகலமுள்ள கிணற்றில் வீரர் ஒருவர் இறங்கி பூனையை உயிருடன் மீட்டு சாக்குப்பையில் போட்டு பத்திரமாக மேல கொண்டுவந்தனர்.
கிணற்றில் இறங்கி தங்களது உயிரை பணயம் வைத்து பூனையின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
தாராபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய பூனை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.