முகப்பு
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் ராகுல் 4-ஆம் நடைப் பயணம்!

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 4-ஆம் நாள் பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 4-ஆம் நாள் பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் தொடங்கினார். 

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) புதன்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இதனை தொடங்கி வைத்தார். 

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நாகர்கோவில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நான்காம் நாளான இன்று கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் தனது பயணத்தைத் தொடங்கினார். 

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் காங்கிரஸ் குழுவினர் பயணம் செய்கின்றனர்.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம், பிறகு மதிய உணவு இடைவேளை, பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம், இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →