தமிழ்நாடு

சீர்காழி: 48 வருடங்களுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

சீர்காழி அருகே புத்தூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சீர்காழி அருகே புத்தூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தங்கள் பள்ளியில் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளைச் செய்வது என உறுதிமொழி ஏற்றனர். 

இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் நாகராஜன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு

கரூர் பலி: தவெக மேல்முறையீட்டு மனு அக். 10ல் விசாரணை!

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

SCROLL FOR NEXT