FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிருஷ்ணகிரி அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

1 பிப்ரவரி 2024, 3:49 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன் (55), காவாபட்டி என்ற கிராமத்தில் உள்ள தனது தென்னந்தோப்பு இருக்கும் ஆற்றைக் கடந்து சென்றார். ஆற்றைக் கடந்து செல்லும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்கு பிறகு முனியப்பனின் உடல் சடலமாக மீட்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆற்று வெள்ளத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் திம்மாபுரம்  கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments