தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இன்று முதல் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி, உதகமண்டலம் தலா 5, தேவாலா, கெட்டி, மூரர்பாளையம் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.