கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும்போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும்போது ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும்போது ஆம்னி கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் தனது வீட்டிற்கு டைல்ஸ் வாங்கிவிட்டு மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமான் திரும்பிச் சென்றுள்ளார்.
அப்போது, தாராசுரம் அருகே தஞ்சை - கும்பகோணம் சாலையில் காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக காரின் முன் பகுதியில் தீ கசிந்துள்ளது. இதனை எதிரே ஒரு காரில் வந்த டிரைவர் பார்த்து அறிவுறுத்தியதால், ஆம்னி காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு மூன்று பேரும் இறங்கிவிட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் இறைத்து அணைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.