முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே பேருந்து - லாரி மோதி விபத்து; ஒருவர் பலி

திண்டுக்கல் அருகே வீரசிக்கம்பட்டி பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பலியானார்.

Updated On : 16 செப்டம்பர், 2022 at 4:44 PM
கோப்புப்படம்
பகிர்:


திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வீரசிக்கம்பட்டி பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பலியானார்.

இன்று அதிகாலை நேரிட்ட இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். பத்துபேர்காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து கம்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து ஓட்டுநர் மணி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகாலையில் நேரிட்ட விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், லாரி மற்றும் பேருந்தின் முகப்புப் பக்கங்கள் ஒன்றோடு ஒன்று பிண்ணிக் கொண்டிருந்த நிலையில், மிகவும் போராடி ஓட்டுநர்களை மீட்டனர். அதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.