தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை நீட்டிப்பு

நடிகர் விஜய்க்கு ரூ1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை அக்.26ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.  

DIN

நடிகர் விஜய்க்கு ரூ1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை அக்.26ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

நடிகா் விஜய் கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 பெற்ாகக் குறிப்பிட்டிருந்தாா். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகா் விஜய் வீட்டில் கடந்த 2015-இல் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பாா்த்தது. 

அதன்படி, புலி படத்துக்குப் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், ‘அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே, காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை அக்.26ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT