தமிழ்நாடு

எனது பேரன், பேத்திகூட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

எனது பேரன், பேத்திகூட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 3 நாள்களில் குணமடைந்ததாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 

தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் காய்ச்சல் அதிகரிப்பது வழக்கம்தான். சாதாரண காலங்களில் 1% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். தற்பொழுது ஒன்றரை சதவீதமாக பாதிப்பு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 368 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவர்களில் 264 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் வீடுகளிலும் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் உள்ளனர்.

இதில், 42 குழந்தைகள் 5 வயதிற்கு குறைந்தவர்கள். 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.

லேசான அறிகுறி இருந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளியில் ஆசிரியர்களும் கண்காணித்து அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவலளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

எனது பேரன், பேத்தியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளனர். எனவே, காய்ச்சல் குறித்து பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT