தமிழ்நாடு

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, 

இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும்  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இதுதவிர, ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேவேளையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின்
மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT